ஸெளராஷ்ட்ர சரித்திர ஆராய்ச்சி மையம்-ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா?

CENTER FOR SAURASHTRA HISTORICAL RESEARCH
ஸெளராஷ்ட்ர சரித்திர ஆராய்ச்சி மையம்
CAN MARRIAGE BE PERFORMED IN SAME GOTHRAM?
ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா? 



நம் ஹிந்து மதம், ஆசாரம், சடங்கு, சம்பிரதாயம், இவைகள் பற்றி பொதுவாக ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதாவது நம் வேத, புராண, சூத்திரங்களிலிருந்து கண்டுபிடித்து சொன்னால், நம் ஸெளராஷ்ட்ர சமூகப் புரோஹிதர்கள் அவ்வளவு லேசில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகையினால், நம் சநாதன தர்மத்திற்கு ஆதாரமான, வேதம் சார்ந்த கிரந்தங்களின் ஆதாரம் கொண்டு, பின் வரும் விஷயங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.  


ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா? இந்த கேள்விக்கு நம் ஸெளராஷ்ட்ர சரித்திர சங்கிரஹம் மற்றும் மஹரிஷி வியாசர், வசிஷ்டர், இவர்கள் என்ன என்ன சொல்கின்றனர்.  

நம் ஸெளராஷ்ட்ர சரித்திர சங்கிரஹம் என்பது நம் முன்னோர்களால் ஆதி காலத்தில், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருகின்றது. இதன் காலமும் சரி, எழுதியவர்களின் பெயர்களும் சரி, தெரியவில்லை. இதை பிரம்மஸ்ரீ. J.S.வெங்கடரமண சாஸ்திரிகள் 1915 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்து, பிரசித்தப் படுத்தி உள்ளார்.

இப்போது ஸெளராஷ்ட்ர சரித்திர சங்கிரஹம் இதைப் பற்றி என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.  மனுஸ்ம்ருதி, மஹரிஷி வேத வியாசர் மற்றும் மஹரிஷி வசிஷ்டர் வாக்கின் ஆதாரம் கொண்டு பின்வருபவை சொல்லப்பட்டு இருக்கின்றது.  

மனுஸ்ம்ருதி- முதலில் எத்தகைய பெண்ணை பிராம்மணன் மணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றது. அன்னிய கோத்திரத்தில் பிறந்த கன்னிகை பிராமணனுக்கு மனையாளாகத் தகுந்தவள் என்று கூறுகின்றது.  

மனுஸ்ம்ருதி
असपिण्डा च या मातुरसगोत्रा च या पितु: |
सा प्रशस्ता द्विजातीनां दारकर्मणि मैथुने ||
मनुस्मृति – 3.6 
இதன் பொருள்-
தாய்வழியில் ஏழு தலைமுறை தாயாதிகள் அல்லாத (அன்னிய) கோத்திரத்தில் பிறந்தவளும், தகப்பன் கோத்திரத்தில் பிறக்காதவளுமான கன்னிகை பிராம்மணர்களுக்கு மனையாளாகத் தகுந்தவள்….. மனுஸ்ம்ருதி – 3.6.

सगोत्रां मातुरप्येके नेच्छन्त्युद्वाह कर्मणि – व्यास: || 
இதன் பொருள்-
பிராம்மணர்கள் தாயாருடைய கோத்திரத்தில் பிறந்த (அம்மான் போன்ற) பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். – மஹரிஷி வியாசர். 

परिणीय सगोत्रां तु समानप्रवरां तथा |
तस्यां कृत्वा समुत्सर्ग द्विजश्चान्द्रायणं चरेत् |
मातुलस्य सुतां चैव मातृगोत्रां तथैव च || वसिष्ठ: |
இதன் பொருள்-
பிராமணன் தன் கோத்திரப் பெண்ணையாவது, தன் ப்ரவர சம்பந்தமான கோத்திரப் பெண்ணையாவது, தாய் மாமன் புத்திரியையாவது, தாயாரின் கோத்திரத்தில் உதித்த பெண்ணையாவது மணந்தால், அதற்கு, சந்திராயணம் என்னும் மஹாவிரதத்தை அனுசரித்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். 

சந்திராயண விரதம் என்றால் என்ன?
அமாவாசையில் விரதம் தொடங்க வேண்டும்…..
காலையில் பித்ருக்களுக்கு தர்பணம் விட வேண்டும்….. (தகப்பன் இல்லாதோர் மட்டுமே தர்பணம் இட வேண்டும்)
மற்றவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வீட்டிலேயே பூஜை செய்து, பின் கோவிலுக்கு சென்று தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கி, நவகிரகம் சுற்றி வர வேண்டும். அன்று இரவு உபவாசம் இருந்து, அடுத்த அமாவாசை வரை, வெங்காயம்/பூண்டு சாப்பிடாமல் இருந்து, மனைவியுடன் சேராமல் இருக்க வேண்டும்.  கடுமையாக விரதம் அனுஷ்டிக்க முடிந்தவர்கள் அடுத்த அமாவாசை வரை தினமும் இரவு ஒரு கவளம் மட்டுமே உண்ண வேண்டும்.

வசதி உள்ளவர்கள் விரதம் முடியும் நாளன்று, உங்கள் வீட்டு புரோஹிதரைக் கொண்டு நவகிரஹ ஹோமம் செய்வது நல்லது.
  
நம் முன்னோர்கள் இதையெல்லாம் எதற்காக நம் சரித்திர சங்கிரகத்தில் சொல்லி வைத்தார்கள் தெரியுமா?
நம் சொந்த வாசஸ்தலமான ஸெளராஷ்ட்ர தேசத்தை விட்டு பல தேசங்கள் கடந்து, கஷ்டப்பட்டு தற்போது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து உள்ளோம். நம் சமூகத்துக்குள் பெண் மற்றும் பிள்ளை கிடைக்கவில்லை என்றால், ச-கோத்திர ச-பிரவரண மணம் பிராயச்சித்தத்தோடு செய்விக்கலாம்.  இது மற்ற சமூகத்தவர் இடம் பெண் கொடுத்து எடுப்பதை விட நல்லது.   

மனம் விரும்பி இஷ்டப்பட்டு ச-கோத்திரத்தில் மற்றும் ச-பிரவரணத்தில் மணம் முடிக்க விரும்புபவர்களுக்கு பரிஹாரம் உண்டு. இதை யாரும் தடுக்க வேண்டாம். மிகவும் நெருங்கிய உறவுகளிடையே, விஞான ரீதியான ஊன சந்ததிகளைத் தடுக்க மணம் தவிர்க்கலாம்.  

Link to "Saurashtra Sarithra Sangraha" book in archives.

Comments

Post a Comment

Popular posts from this blog

VIRTUAL INSTITUTE OF SAURASHTRA LANGUAGE AND RESEARCH