CENTER FOR SAURASHTRA HISTORICAL RESEARCH ஸெளராஷ்ட்ர சரித்திர ஆராய்ச்சி மையம் CAN MARRIAGE BE PERFORMED IN SAME GOTHRAM? ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா? நம் ஹிந்து மதம், ஆசாரம், சடங்கு, சம்பிரதாயம், இவைகள் பற்றி பொதுவாக ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதாவது நம் வேத, புராண, சூத்திரங்களிலிருந்து கண்டுபிடித்து சொன்னால், நம் ஸெளராஷ்ட்ர சமூகப் புரோஹிதர்கள் அவ்வளவு லேசில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகையினால், நம் சநாதன தர்மத்திற்கு ஆதாரமான, வேதம் சார்ந்த கிரந்தங்களின் ஆதாரம் கொண்டு, பின் வரும் விஷயங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. ச-கோத்திரத்தில் மணம் செய்யலாமா? இந்த கேள்விக்கு நம் ஸெளராஷ்ட்ர சரித்திர சங்கிரஹம் மற்றும் மஹரிஷி வியாசர், வசிஷ்டர், இவர்கள் என்ன என்ன சொல்கின்றனர். நம் ஸெளராஷ்ட்ர சரித்திர சங்கிரஹம் என்பது நம் முன்னோர்களால் ஆதி காலத்தில், சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருகின்றது. இதன் காலமும் சரி, எழுதியவர்களின் பெயர்களும் சரி, தெரியவில்லை. இதை பிரம்மஸ்ரீ. J.S.வெங்கடரமண சாஸ்திரிகள் 1915 ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்து, பிரச...